கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி

சேலம்:சேலத்தில் சுய உதவி குழுக்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி நடந்தது. சேலம் அமானி கொண்டலாம்பட்டி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், காந்தி காதி மற்றும் வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் சங்கம், சேலம் நபார்டு வங்கி சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு இலவச ஊதுபத்தி, பனை ஓலை கைவினை பொருட்கள் தயாரிக்கும் சிறு தொழிற்பயிற்சி நடந்தது.நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் மணிமேகலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மத்திய பனை வெல்லம் மற்றும் பனைப்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி, ஜலிலா ஆகியோர் பனை ஓலையில் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.காந்தி காதி மற்றும் வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் சங்க நிறுவனர் ராகவன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ராமதாஸ், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.செயலாளர் விஜயவள்ளி நன்றி கூறினார்.

--தினமலர்