முன்னாள் துணைவேந்தருக்கு பல்கலை சார்பில் விடையனுப்பு விழா
சேலம்: சேலம் பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் தங்கராசுவுக்கு பல்கலை சார்பில் விடையனுப்பு விழா நடத்தப்பட்டது.சேலம் பெரியார் பல்கலையில் 2007 ஜூலை 19 முதல் துணைவேந்தராக இருந்து வந்தவர் தங்கராசு. இவரது பதவிக்காலம் ஜூலை 18 உடன் நிறைவடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் தன் பொறுப்புகளை பேராசிரியர் கிருஷ்ணகுமாரிடம் ஒப்படைத்து, பல்கலையிலிருந்து விடைபெற்றார்.
பல்கலை சார்பில் நடந்த விடையனுப்பு விழாவில் பதிவாளர் குணசேகரன் தலைமை வகித்து, முன்னாள் துணைவேந்தர் தங்கராசுவை கவுரவித்தார். இதில் தேர்வாணையர் ஜெயக்குமார், நிதி அலுவலர் ரவி, தொலைநிலைக்கல்வி இயக்குனர் குணசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரியார் பல்கலை ஊழியர் சங்கம் சார்பில் தலைவர் ராமன், செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரும், பணியாளர் சங்கம் சார்பில் தலைவர் அரசு, செயலாளர் துறை, பொருளாளர் மாதவன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.தொகுப்பூதிய ஊழியர்கள் சார்பில் நடந்த விடையனுப்பு விழாவில் கோபால்ராஜ், சக்திவேல், சவுந்திரபாண்டி, ஏகலைவன் உள்ளிட்டோர், தினக்கூலி பணியாளர்களை தொகுப்பூதியத்துக்கு மாற்றியமைக்காக நன்றி தெரிவித்தனர்.
--தினமலர்