கோடைகால நீச்சல் பயிற்சி மாணவர் சேர்க்கை துவக்கம்
சேலம்:சேலம் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமுக்கு மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது.
சேலம் மாவட்ட அளவிலான முதல் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் வரும் 16ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிவடைகிறது. காலை 7 முதல் 10 மணி, மாலை 4 முதல் 5 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தற்போது காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 130 செ.மீ., உயரத்திற்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன் கூறியதாவது: முதல் கட்ட நீச்சல் பயிற்சியானது 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வரும் 14ம் தேதி நிறைவடைகிறது. இப்பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. பயிற்சி பெறும் மாணவர்கள் மாநில, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் வரும் 16ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. தற்போது சேர்க்கை நடப்பதால் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
--தினமலர்