|
|
| ||||||||||||||||||||||||||||||||||||
19.01.2012மேஷம்: ஓய்வாக உட்கார கூட நேரமில்லாமல் கடுமையாக பணியாற்றலாம். ஏமாற்றங்களை தவிர்க்க எதிலும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். உடன்பிறப்புகள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் உபத்திரவங்களைச் சந்திக்கலாம். திட்டமிட்ட பயணங்களில் திடீரென மாற்றங்கள் செய்யலாம். வெறுப்பு, விரக்தி உண்டாகும். |
||||||||||||||||||||||||||||||||||||||
| ரிஷபம்:நண்பர்களிடம், உறவினர்களிடம் கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை, விருப்பங்களை பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். அண்டை அயலாருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளியூர் பயணங்கள் விரும்பும் விதத்தில் அமையும். உங்களின் கடந்த கால அனுபவங்களை பற்றி பெருமையாக பேசுவீர்கள். | ||||||||||||||||||||||||||||||||||||||
|
மிதுனம்:கனிவாக பேசி காரியங்கள் சாதிப்பீர்கள். பொருளாதார நிலைமையில் மேம்பாடு காணலாம். கடன் பாக்கிகளை, கட்டண பாக்கிகளை செலுத்துவதில் அக்கறை காட்டுவீர்கள். உடல் நலக்குறைவால் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். புறம் பேசும் சிலரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். குரு வழிபாட்டின் மூலம் குதூகலம் கூடும். |
||||||||||||||||||||||||||||||||||||||
|
கடகம்: மதிப்பு, மரியாதைக்கு பாதிப்பு வரும் வகையிலான நிகழ்ச்சிகள் நடக்கலாம். நடப்பது போல தோன்றிய காரியம் ஒன்று கடைசி நேரத்தில் நடக்காமல் போகலாம். உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்வீர்கள். சிலர் மீது தேவையில்லாமல் கோபம் கொள்ளலாம். வாகனங்களை பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். திடீர் செலவு நேரும். |
||||||||||||||||||||||||||||||||||||||
| சிம்மம்:சக ஊழியர்கள் அல்லது நண்பர்களுக்காக சில செலவுகளைச் செய்யலாம். தேக ஆரோக்கியம் பற்றிய கவலை உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். ஏதோ ஒரு வழியில் சிறு பணவரவுகளைப் பெறலாம். தொழில் ரீதியான விஷயம் ஒன்றில் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கலாம். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. | ||||||||||||||||||||||||||||||||||||||
| கன்னி:எதிர்பாராத பணவரவுகளைப் பெறலாம். பால்ய நண்பர்கள் சிலரை தேடிச் சென்று சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது கொண்டிருந்த கோபதாபங்கள் விலகும். பெண்கள் கடும் வேலைப்பளுவால் அவதிப்படலாம். சக ஊழியர்கள் அல்லது நண்பர்களுடன் பார்ட்டி, கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். சுகமான அனுபவம் உண்டு. | ||||||||||||||||||||||||||||||||||||||
| துலாம்:எதிலும் அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். செய்த வேலை ஒன்றில் திடீரென மாற்றங்கள் செய்யலாம். நீங்கள் போட்டியாக நினைத்து செயல்பட்ட ஒருவர் நட்பாக நடந்து கொள்ளலாம். சிலரின் தவறுகளை சுட்டுக் காட்டுவீர்கள். பல முறை முயற்சித்தும் சில வேலைகள் முடியாமல் தடைபடலாம். குடும்பச் செலவு கூடும். | ||||||||||||||||||||||||||||||||||||||
| விருச்சிகம் : நீங்களே சிரமத்தில் இருக்கும் போது, சிலர் உங்களிடம் உதவி கேட்டு தொந்தரவு கொடுக்கலாம். உடல் நலம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் நீங்கள் திட்டமிட்ட சில வேலைகளைச் செய்ய முடியாமல் போகலாம். விவசாயிகள் விளை பொருட்கள் விற்பனை மூலம் கூடுதல் லாபம் பெறலாம். | ||||||||||||||||||||||||||||||||||||||
| தனுசு:சிலரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் சாக்குப் போக்கு சொல்லி சமாளிக்கலாம். தர்ம, புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். சோர்வு, சோம்பலால் சில வேலைகளை வசதிக்கு ஏற்றார் போல செய்வீர்கள். திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். பணப் பற்றாக்குறையை சந்திக்கலாம். | ||||||||||||||||||||||||||||||||||||||
| மகரம்: நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வீர்கள். ஏதோ ஒரு வகையில் பணவரவுகளைப் பெறலாம். மனைவி, குழந்தைகளின் சின்ன, சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் சிலரின் ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். | ||||||||||||||||||||||||||||||||||||||
| கும்பம்:எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கை, துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உடன்பிறப்புகள் உங்களின் முயற்சிகளுக்கு தடை போடலாம். அரசியல்வாதிகள் ஓய்வின்றி கடுமையாக அலைய நேரிடலாம். வியாபாரிகள் இருப்பு பொருட்களால் கூடுதல் ஆதாயம் பெறுவர். புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள். தம்பதியர் இடையே அன்யோன்யம் கூடும். | ||||||||||||||||||||||||||||||||||||||
| மீனம்:கவனக் குறைவான செயல்பாடுகளால் அவதிகளுக்கு ஆட்படலாம். பிள்ளைகளுக்கு நல்ல யோசனைகள் சொல்லி நல்வழிப்படுத்துவீர்கள். தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். பொழுதுபோக்கு, உல்லாச விஷயங்களில் நாட்டம் செல்லும். நட்பாக செயல்பட்ட சிலரே விரோதமாக செயல்படலாம். எதிர்பாராத சம்பவம் நடக்கலாம். | ||||||||||||||||||||||||||||||||||||||
| --தினமலர் | ||||||||||||||||||||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||||||||||||||||||||
|
Top | ||||||||||||||||||||||||||||||||||||||